www.garudabazaar.com

“எலி மட்டும் இல்லங்க..”- எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டரில் வேறென்ன ஸ்பெஷல் இருக்கும்..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தின் ரொமாண்டிக் பாடலான ‘அந்தி மாலை நேரம்’ பாடலின் லிரிக் வீடியோ வெளியானது.

Andhimaalai Neram, a romantic single from SJ Suryah's Moster film has been released

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஃபேன்டசி காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.

கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மே.17ம் தேதி ரிலீசாகிறது. இதனிடையே, இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை குவித்த நிலையில், தற்போது ரொமாண்டிக் பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ள ‘அந்தி மாலை நேரம்’ பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் இப்படம் குறித்த கலட்டாவான ட்வீட்டிற்கு பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா, ‘இந்த படத்துல எலி மட்டும் இல்லங்க.. மான் கூட இருக்கு, அதுவும் ‘மேயாத மான்’ பிரியா பவானி ஷங்கர்’ என ட்வீட் செய்து அந்த பாடலை பகிர்ந்துள்ளார்.

“எலி மட்டும் இல்லங்க..”- எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டரில் வேறென்ன ஸ்பெஷல் இருக்கும்..? வீடியோ