எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தின் ‘ஓட முடியாது ஒளிய முடியாது’ பாடலின் லிரிக் வீடியோ வெளியானது
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஃபேன்டசி காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.
கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மே.17ம் தேதி ரிலீசாகிறது. இதனிடையே, இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை குவித்த நிலையில், தற்போது படத்தில் இடம்பெறும் ஓட முடியாது ஒளிய முடியாது எனும் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
எலியை மையப்படுத்திய இப்ப படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் காமெடி கலாட்டா குழந்தைகளை கவரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
'ஓட முடியாது ஒளிய முடியாது' எலிய கொல்ல திட்டம் வீடியோ