யூடியூப் ஸ்டார்ஸ் ஒன்றிணைந்த சிவகார்த்திகேயன் படத்தின் லிரிக்கல் வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கனா' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்திருக்கும் படம் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா'. இந்த படத்தில் விஜய் டிவி பிரபலம் ரியோ ராஜ் ஹீரோவா நடிக்கிறார்.

Sivakarthikeyanj's Nenjamundu Nermaiyundu Odu Raja Lyrical video here

மேலும் இந்த படத்தில் ஷிரின் காஞ்வாலா, ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்ஜே விக்னேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை கார்த்திக் வேணுகோபால் இயக்குகிறார்.

இந்த படம் வருகிற ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. இந்த படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த படத்துக்கு ஷபிர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து இண்டர்நெட் பசங்க என்ற  பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை ஆர்ஜே விக்னேஷ்காந்த் எழுத, திவாகர், ஷபிர், ராக் ஸ்டார் ரமணி அம்மாள் ஆகியோர் பாடியுள்ளார்.

யூடியூப் ஸ்டார்ஸ் ஒன்றிணைந்த சிவகார்த்திகேயன் படத்தின் லிரிக்கல் வீடியோ இதோ வீடியோ