தெலுங்கில் ரீமேக்காகும் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் ஹிட் படம் - மீண்டும் அதே ரோலில்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்ஷன் சார்பாக தயாரித்திருந்த படம் 'கனா' . இந்த படத்தை பிரபல நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவரான அருண்ராஜா காமராஜ் இயக்கினார்.

Sivakarthikeyan and Aishwarya Rajesh's Kanaa Remake Kousalya Krishnamurthy

பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, திபு நிணன் தாமஸ் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். கடந்த வருடம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், என்னுடைய முதல் தெலுங்கு திரைப்படம் 'கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி'.

இந்த படத்தின் முதல்பார்வை நாளை டிசம்பர் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்கு  வெளியாகும். இந்த படத்தின் இயக்குநர் பீமனேனி ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இது 'கனா' படத்தின் ரீமேக் என்றும் குறிப்பிட்டுள்ளார்.