உன்னால ஒன்னே ஒன்னு மிச்சம்டா.. கரண்ட் பில் கட்ணதேயில்லடா..- சிக்ஸர் டீசர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகி வரும் ‘சிக்ஸர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Vaibhav's Sixer film Teaser with Goundamani reference has been released by Sivakarthikeyan

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் மிகவும் பிரபலமான ‘இதயம் முரளி’-யாக கேமியோ ரோலில் நடிகர் வைபவ் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது ‘சிக்ஸர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சிக்ஸர் என்றாலும், இது கிரிக்கெட் சம்மந்தப்பட்ட படம் இல்லை. 6 என்ற எண் இந்த படத்தின் கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஸ்ரீதர் மற்றும் தினேஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கி வரும் இப்படத்தில் வைபவ், சதீஷ், பலக் லால்வானி, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வால்மேட் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த டீசரை சின்னத்தம்பி திரைப்படத்தில் வரும் காமெடி லெஜெண்ட் கவுண்டமணிக்கு சமர்ப்பணம் செய்வதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த படத்தின் டீசரில் 6 மணிக்கு மேல் கண்ணு தெரியாமல் கஷ்டப்படும் நாயகன், என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்கிறார் என்பதை நகைச்சுவை கலந்து கூறியுள்ளனர்.

உன்னால ஒன்னே ஒன்னு மிச்சம்டா.. கரண்ட் பில் கட்ணதேயில்லடா..- சிக்ஸர் டீசர் இதோ வீடியோ