“நமக்கு தல தான் முக்கியம்” சிவகார்த்திகேயன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் தன் படங்களில் எப்போதும் அஜித் ரெபரென்ஸ் இருக்கும்.

Sivakarthikeyan Nayanthara Mr.local New Promo

அந்த வகையில் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள சிவகார்த்திகேயனின் 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படத்தின் புரமோஷன் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனும், ராதிகாவும் பைக்கில் செல்ல, தலையில் உள்ள ஹெல்மெட் குறித்து ராதிகா, 'ரோட்ல போறவங்க வர்றவங்க எல்லாம் என்னை ஒரு மாதிரியாக பார்க்கின்றனர்' என்று கூற அதற்கு சிவகார்த்திகேயன், 'கரெக்டாக இருந்தாலே நம்ம ஊருல ஒரு மாதிரிதான் பார்ப்பாங்க, நமக்கு 'தல' தான் முக்கியம் என்று கூறுவார்

இந்த வசனத்தில் இருந்து ஹெல்மெட்டின் அவசியத்தை குறிப்பிடுவது மட்டுமின்றி 'தல' தான் முக்கியம் என்று கூறியதன் மூலம் அஜித் ரசிகர்களின் ஆதரவையும் சிவகார்த்திகேயன் பெற்று வருகிறார். இந்த வீடியோவுக்கு தல ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகின்றனர்.