Veetla Vishesham Others Page USA

போடு சரவெடிய..சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE' படத்தின் வெளியான புதிய ரிலீஸ் தேதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் PRINCE படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

SivaKarthikeyan Prince Movie Release Date Postponed to Diwali

Also Read | PRINCE படத்துக்கு ஒரு ஹிட் சாங் போடுங்க.. சிவகார்த்திகேயன் - இசையமைப்பாளர் தமன் சந்திப்பு!

கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் உலகெங்கும் வெற்றிகரமாக  (13.05.2022) அன்று ரிலீசாகி 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்தது. டான் படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த புதிய சிவகார்த்திக்கேயன் படத்தை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் வில்லனாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

SivaKarthikeyan Prince Movie Release Date Postponed to Diwali

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் 8 வருடங்களுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் நவீன் பொலிசெட்டியும் நடிக்க உள்ளார்.

சில நாட்களுக்கு முன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்க இருக்கிறார்.  மரியா , போலந்து-உக்ரேனிய திரைப்படமான 'ஈடர்' இல் நடித்தவர். மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஸ்பை சாகா ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5 இல் 'நடாஷா' என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.

SivaKarthikeyan Prince Movie Release Date Postponed to Diwali

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 10.02.2022  அன்று துவங்கியது. படக்குழு காரைக்குடி அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினர். காரைக்குடிக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது.  பிரின்ஸ் படம், வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் நாள் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனை பிரத்யேக வீடியோவை வெளியிட்டு படக்குழு டிவிட்டரில் அறிவித்துள்ளனர்.

SivaKarthikeyan Prince Movie Release Date Postponed to Diwali

பிரின்ஸ் படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் வலிமை படத்தை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | பரபரப்பான அறிக்கை விட்டு எச்சரித்த நடிகை வேதிகா.. இதான் காரணமா? முழு தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Prince Movie Release Date Postponed to Diwali

People looking for online information on Prince Movie, Prince Movie Release Updates, Sivakarthikeyan will find this news story useful.