Viruman Logo Top
Kaateri logo top
www.garudabazaar.com

"லால்சிங் சத்தா" படத்தை பார்த்த பிரபல தமிழ் இயக்குனரின் உருக்கமான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆமிர் கான் நடித்த லால்சிங் சத்தா படத்தை சிறப்பு திரையிடலில் பார்த்து விட்டு பிரபல முன்னணி இயக்குனர் முகநூலில் நெகிழ்ச்சியான பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Director Ravikumar about Amir Khan Laal Singh Chaddha Movie

Also Read | சுந்தர் சி இயக்கும் காஃபி வித் காதல்.. யுவன் & ஆதி குரலில் ரிலீசான கலர்ஃபுல் 'தியாகி பாய்ஸ்'!

1994 ஆம் ஆண்டு வெளியான FORREST GUMP திரைப்படத்தின் ரீமேக்கில் (லால்சிங் சத்தா) டாம் ஹாங்க்ஸ் நடித்த  கம்ப் கதாபாத்திரத்தில் ஆமீர் கான் நடித்துள்ளார்.

சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 ஆஸ்கர் விருதுகளை பாரஸ்ட் கம்ப் படம் வென்று குவித்தது.

இந்த லால்சிங் சத்தா படத்தில் ஆமீர் கானுடன் கரினா கபூர் கதாநாயகியாக ராபின் ரைட் பாத்திரத்தில் நடிக்கிறார். 

அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்க, அமீர் கானே தனது நிறுவனம் வழியாக தயாரித்துள்ளார்.

Director Ravikumar about Amir Khan Laal Singh Chaddha Movie

இந்த படத்தின் நாக சைதன்யா, பாலராஜூ எனும் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா ராணுவ வீரனாக நடித்துள்ளார். நடிகர் ஆமிர் கான் லால் சிங் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரூபா எனும் கதாபாத்திரத்தில் நடிகை கரீனா கபூர் நடிப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படம் வருகிற 11 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

Director Ravikumar about Amir Khan Laal Singh Chaddha Movie

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.  இந்த படத்தின் சிறப்பு திரையிடல் சென்னையில் நடந்தது. அதில் படத்தை பார்த்து விட்டு பிரபல அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் முகநூலில் பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில் "#லால்சிங்சத்தா

நேற்று இரவு தனித்திரையிடலில் கலந்து கொண்டு படம் பார்த்தேன். “பாரஸ்ட் கம்ப்” படத்தின் மிகப்பெரும் ரசிகனான எனக்கு அந்த படம் அமிர்கான் அவர்கள் நடிப்பில் “லால் சிங் சத்தா” என்று ரீமேக் ஆகிறது என்ற அறிவிப்பில் இருந்தே ஆர்வம் மேலோங்கியிருந்தது.

படம் பார்க்க துவங்க, மெல்ல மெல்ல அமிர்கான் அவர்கள் உள்ளத்திற்குள் ஊடுருவ ஆரம்பித்தார். ஒவ்வொரு காட்சியிலும் மனம் டாம் ஹாங்கஸின் நடிப்போடு ஒப்பீடு செய்துகொண்டே வந்தாலும் அமீர்கான் அவர்கள் ஒரு துளி குறைவைக்கவில்லை. அவரது தனித்துவமான நடிப்பு படத்தை தூக்கி நிறுத்தியது. பல இடங்களில் கண்ணீர் துளிர்க்கவைத்ததே படம் அதன் ஆன்மாவை சிதைக்காமல் உருவானதற்கு சாட்சி.

Director Ravikumar about Amir Khan Laal Singh Chaddha Movie

உன்னதமான மனிதனை, கதாபாத்திரத்தை சினிமாவில் காட்சிபடுத்துவது அருகிவரும் நேரத்தில் லால்சிங் சத்தாவில் அமீர்கான் உன்னதமான மனிதனை உயிர்பித்து உலவ விட்டிருக்கிறார். வெற்றியும் பெற்றிருக்கிறார்.

படத்தை இந்தியத்தன்மையோடு உருவாக்க அதுல் குல்கர்னி அவர்கள் மிக சிறப்பாக திரைக்கதையில் பங்குவகித்திருக்கிறார். அத்வைத் சந்தன் ரசித்து ரசித்து படத்தை இயக்கியிருக்கிறார்.

படம் நிறைவடையும் போது மிக அற்புதமான ஒரு அனுபவம், பரவசம் மனதை நிறைத்து அனுப்பியது. நிச்சயம் தவறவிடாதீர்கள். படக்குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். i love AamirKhan" என குறிப்பிட்டுள்ளார்

Also Read | பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது'.. வெளியான கலர்ஃபுல்லான முதல் சிங்கிள் பாடல்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Director Ravikumar about Amir Khan Laal Singh Chaddha Movie

People looking for online information on Aamir Khan, Laal Singh Chaddha, Laal Singh Chaddha Movie Updates, Ravikumar will find this news story useful.