The Legend
Maha others
www.garudabazaar.com

VIDEO: தமிழ் பேசும் ஆமிர்கான்.. வெளியான "லால்சிங் சத்தா" படத்தின் தமிழ் டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆமிர் கான் நடிக்கும் லால்சிங் சத்தா படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Forrest Gump Laal Singh Chaddha Movie Tamil Trailer Released

Also Read | 'வாரிசு' படத்துல மொத்தம் எத்தனை பாட்டு? இசையமைப்பாளர் தமன் கொடுத்த EXCLUSIVE அப்டேட்!

டாம் ஹாங்க்ஸ் நடித்த FORREST GUMP படத்தின் ரீமேக்கில் கம்ப் கதாபாத்திரத்தில் ஆமீர் கான்  நடிக்கிறார். 

1994 ஆம் ஆண்டு வெளியான FORREST GUMP திரைப்படத்தை ராபர்ட் ஜெமிக்ஸ் இயக்கினார். இவர் 'Back to the Future' சீரிஸ் படங்களை இயக்கிவர், 677 மில்லியன் டாலர் வசூல் செய்து 13 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 6 ஆஸ்கர் விருதுகளை வாங்கிய படம் இது.

சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது.

Forrest Gump Laal Singh Chaddha Movie Tamil Trailer Released

இந்த படத்தில் ஆமீர் கானுடன் கரினா கபூர் கதாநாயகியாக ராபின் ரைட் பாத்திரத்தில் நடிக்கிறார்.  நாக சைதன்யா முக்கிய ராணுவ வீரர் வேடத்தில் நடிக்கிறார்.

அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்க, அமீர் கானே தனது நிறுவனம் வழியாக தயாரித்துள்ளார். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.  இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்தியில் இடம்பெற்ற அதே காட்சிகளுடன் தமிழ் டிரெய்லர் வெளியாகி உள்ளது. பின்னணி இசையின் கடைசி இடங்களில் மட்டும் தமிழுக்கு என்று மாற்றப்பட்டுள்ளது.

Forrest Gump Laal Singh Chaddha Movie Tamil Trailer Released

இந்த படத்தின் நாக சைதன்யா, பாலராஜூ எனும் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா ராணுவ வீரனாக நடித்துள்ளார். நடிகர் ஆமிர் கான் லால் சிங் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ரூபா எனும் கதாபாத்திரத்தில் நடிகை கரீனா கபூர் நடிப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படம்  11 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

Also Read | வேட்டி சட்டையில் இயக்குனர் H. வினோத்.. இணையத்தை கலக்கும் 'AK61' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

VIDEO: தமிழ் பேசும் ஆமிர்கான்.. வெளியான "லால்சிங் சத்தா" படத்தின் தமிழ் டிரெய்லர்! வீடியோ

Forrest Gump Laal Singh Chaddha Movie Tamil Trailer Released

People looking for online information on Laal Singh Chaddha Movie, Laal Singh Chaddha Movie Tamil Trailer will find this news story useful.