Viruman Logo Top
Kaateri logo top
www.garudabazaar.com

பிரபல OTT-யில் ரிலீஸாகும் நயன்தாரா & விக்னேஷ் சிவன் திருமண வீடியோ.. வெளியான சூப்பர் டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் பிரபல OTT-யில் வெளியாக உள்ளதை முன்னிட்டு அந்த ஆவணப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.

Vignesh Shivan Nayanthara Beyond The Fairy Tale Netflix Teaser

Also Read | லோகேஷ் கனகராஜூக்கு கமல் பரிசளித்த கார் இது தானா? வெளியான காரின் முழு புகைப்படங்கள்!

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமண நிகழ்விற்கு இயக்குனர் மணிரத்னம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி, கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அனிருத், அட்லி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Vignesh Shivan Nayanthara Beyond The Fairy Tale Netflix Teaser

திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கும் சென்று ஜோடியாக விக்னேஷ் சிவன் & நயன்தாரா சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு தாய்லாந்து ரசிகர்களுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களும் வைரலாகின.

Vignesh Shivan Nayanthara Beyond The Fairy Tale Netflix Teaser

தேனிலவில் இருந்து தொடர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்ந்து பகிர்ந்தார்.

இந்த  வீடியோக்கள் & புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகின. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றன.

தேனிலவு முடிந்து இந்தியா திரும்பியதும் நயன்தாரா, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சில நாட்களுக்கு முன் இணைந்தார்.  இது தொடர்பான புகைப்படங்கள் & வீடியோக்கள் வெளியாகின. விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக விளம்பர பணிகளில் ஈடுபட்டார்.

Vignesh Shivan Nayanthara Beyond The Fairy Tale Netflix Teaser

இந்நிலையில் பிரபல OTT நிறுவனமான நெட்பிளிக்ஸ் நயன்தாரா & விக்னேஷ் சிவனின் திருமண நிகழ்வுகளை ஒருங்கிணைத்து ஒரு ஆவணப் படமாக உருவாக்கியுள்ளது. "Nayanthara beyond the fairy tale" என இந்த ஆவணப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ்காக ‍கௌதம் மேனன் இந்த படத்தை இயக்கி உள்ளார். விரைவில் இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு தற்போது இந்த ஆவணப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. டீஸரில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தோன்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

 

Also Read | முதல் முறையாக பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் R J பாலாஜி நடித்த "வீட்ல விசேஷம்".. எப்போ? எதுல?

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Nayanthara Beyond The Fairy Tale Netflix Teaser

People looking for online information on Nayanthara, Nayanthara Beyond The Fairy Tale, Netflix Teaser, Vignesh shivan will find this news story useful.