"ஆக்ஷன் காட்சியில் என்னை மிஞ்சிவிட்டாய் " மகளுக்கு வாழ்த்து கூறிய சுப்ரீம் ஸ்டார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரலட்சுமி நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் ‘சேஸிங்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சரத்குமார் சென்று படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

Sarathkumar lauds Varalaxmi Sarathkumar's viral stunt video

தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருபவர் வரலட்சுமி. தற்போது இவரது நடிப்பில் சேஸிங் என்ற ஆக்‌ஷன் திரில்லர் உருவாகி வருகிறது. இப்படத்தை கே.வீரக்குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு சமீபத்தில் படமாக்கியுள்ளது. அதில் வரலட்சுமி கயிறு பயன்படுத்தாமல், டூப் ஏதுமில்லாமல் சண்டை போடும் வீடியோவை வரலட்சுமி பகிர்ந்தார்.

வரலட்சுமியின் இந்த ஸ்டண்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர் சூப்பர் சுப்புராயன் இந்த படத்திற்கான சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருந்தார்.

தற்போது இதன் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகரும், வரலட்சுமியின் தந்தையுமான சரத்குமார் சென்றிருக்கிறார். வரலட்சுமியின் சண்டைக் காட்சியை பாராட்டியதும் மட்டுமில்லாமல், படக்குழுவினரையும் பாராட்டியிருக்கிறார். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.