சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK20.. FIRST LOOK போஸ்டர் & TITLE எப்போ? தமன் கொடுத்த சூப்பர் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் SK 20 படத்தின் முதல் லுக் போஸ்டர் & தலைப்பு வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

SivaKarthikeyan SK 20 Movie Title and First Look from Tomorrow

Also Read | 'விக்ரம்' பார்த்துட்டு இயக்குனர் ஷங்கர் ட்வீட்.. லோகேஷ் & அனிருத் பற்றி வைரல் பதிவு.!

கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் உலகெங்கும் வெற்றிகரமாக  (13.05.2022) அன்று ரிலீசாகி 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்தது. டான் படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் SK20 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த புதிய சிவகார்த்திக்கேயன் படத்தை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் வில்லனாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

SivaKarthikeyan SK 20 Movie Title and First Look from Tomorrow

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் 8 வருடங்களுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் நவீன் பொலிசெட்டியும் நடிக்க உள்ளார். சில நாட்களுக்கு முன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்க இருக்கிறார்.  மரியா , போலந்து-உக்ரேனிய திரைப்படமான 'ஈடர்' இல் நடித்தவர். மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஸ்பை சாகா ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5 இல் 'நடாஷா' என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.

SivaKarthikeyan SK 20 Movie Title and First Look from Tomorrow

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 10.02.2022  அன்று துவங்கியது. படக்குழு காரைக்குடி அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினர். காரைக்குடிக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது.  SK20 படம், வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் நாள் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இப்படத்தின் முதல் லுக் போஸ்டரும், பட தலைப்பும் நாளை அறிவிக்கப்படும் என புதிய போஸ்டரை வெளியிட்டு  தமன் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

SivaKarthikeyan SK 20 Movie Title and First Look from Tomorrow

SK20 படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் வலிமை படத்தை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | சாய் பல்லவி நடிக்கும் புதிய தமிழ்ப்படம்.. தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan SK 20 Movie Title and First Look from Tomorrow

People looking for online information on Sivakarthikeyan, Sk 20 Movie, SK 20 Movie updates will find this news story useful.