தியேட்டரில் கலக்கிய சிவகார்த்திகேயனின் ‘டான்’… பிரபல ஓடிடியில்… வெளியான Exciting தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயனின் சமீபத்தைய திரைப்படமான டான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

Sivakarthikeyan DON movie ott release announced

டான் ரிலீஸ்…

சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி  இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றியவர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படம் மே 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயிண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Sivakarthikeyan DON movie ott release announced

ரசிகர்களை கவர்ந்த செண்ட்டிமெண்ட்…

சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக டான் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டான் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது டான் திரைப்படம். படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய மூவருக்கும் பாராட்டுகள் குவிந்தன.

Sivakarthikeyan DON movie ott release announced

டான் வசூல்…

டாக்டர் வெற்றிப் படத்துக்குப் பிறகு ரிலீஸ் ஆன சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், நல்ல வசூல் செய்து வருகிறது. வெளியாகி 12 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகெங்கும் திரையரங்குகள் மூலமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.  இப்போதும் பல திரையரங்குகளில் ’டான்’ திரைப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

Sivakarthikeyan DON movie ott release announced

டான் ஓடிடி ரிலீஸ்…

இந்நிலையில் டான் படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் கைப்பற்றி இருந்தது. இதையடுத்து டான் திரைப்படம் ஜூன் 10 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. இந்த செய்தி சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan DON movie ott release announced

People looking for online information on Don, India, Netflix, Priyanka Mohan will find this news story useful.