"அந்த 60 நிமிஷம் இருக்கே.." சூப்பர்ஸ்டாருடன் SK எடுத்துக் கொண்ட ஃபோட்டோ.. அவர் போட்ட Caption தான் 'செம'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த 'டாக்டர்' திரைப்படம், மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

Sivakarthikeyan shares photo with rajinikanth in twitter

Also Read | ‘ஜானி ஜானி எஸ் பாப்பா… புதுசா இப்ப ஒரு பாப்பா’… ‘வீட்ல விசேஷம்’ ஜாலியான Daddy பாட்டு

இதனைத் தொடர்ந்து, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்திருந்த 'டான்' திரைப்படம், கடந்த மே 13 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

அனிருத் இசையமைத்த டான் திரைப்படத்தில், சிவர்கார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்ஜே சூர்யா, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சூப்பர்ஸ்டாரை சந்தித்த 'SK'

அது மட்டுமில்லாமல், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற டான் திரைப்படம், வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan shares photo with rajinikanth in twitter

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன், அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், தன்னுடைய கேப்ஷனில், "இந்திய சினிமாவின் டான் உடன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, அவரின் ஆசீர்வாதத்தினை பெற்றேன். அவருடனான அந்த 60 நிமிடங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். உங்களின் நேரத்திற்கும், டான் படத்திற்கான மதிப்புமிக்க பாராட்டுக்களுக்கும் நன்றிகள் தலைவா" என குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் வழக்கம்

பொதுவாக, மற்ற திரைப்படங்களை பார்த்து, உடனடியாக அந்த படக்குழுவை பாராட்டுவதை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், தற்போது டான் படத்தையும் பார்த்து பாராட்டி உள்ளார். முன்னதாக, நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர், ரஜினிகாந்தை நேரில் சந்தித்த புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | “வேற Heroes கூட சேர்ந்து நடிப்பீங்களா…” 'தி லெஜண்ட்' பட விழாவில் சரவணன் மாஸ் பதில்.!

 

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan shares photo with rajinikanth in twitter

People looking for online information on Rajinikanth, Sivakarthikeyan, Sivakarthikeyan shares photo with rajinikanth will find this news story useful.