“இது உலக சினிமா இல்ல… உள்ளூர் சினிமா…” டான் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயனின் Viral speech

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டான் படத்தின் 25 ஆவது நாள் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.

Sivakarthikeyan speech in don success meet viral

டான் 100 கோடி வசூல்…

சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி  இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்த இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்தன. மே 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயிண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற ‘டான்’ திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Sivakarthikeyan speech in don success meet viral

டான் வெற்றிவிழா…

இந்நிலையில் நேற்று டான் திரைப்படம் 25 ஆவது நாளை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் கேடயம் வழங்கும் வெற்றிவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக லைகா சுபாஷ்கரன் இலண்டனில் இருந்து சென்னைக்கு வந்திர்ந்தார். இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர்.

உலக சினிமா இல்ல…

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் “டான் படத்தை முதலில் லைகா நிறுவனத்தினர் வேண்டாம் என்றனர். ஏதாவது பெரிய இயக்குனர் வைத்து பெரிய படமாக பண்ணலாம் என்றனர். ஆனால் எனக்கு டான் படத்தில் சொல்லப்பட்ட எனர்ஜியும் எமோஷனும் பிடித்திருந்தது. அதனால் பண்ணலாம் என்றேன். சரி பண்ணலாம் நீங்களே பண்ணுங்கள் எனக் கூறி சம்மதித்தனர். படத்துக்கு அறிமுக இயக்குனர் என்பதால் குறைவான பட்ஜெட்தான் கொடுத்தனர். டான் உலக சினிமா உல்லை. உள்ளூர் சினிமா. நம்ம ஊரின் எமோஷன், நட்பு ஆகியவற்றை சொல்லும் படம். சில ஆண்டுகளாகவே இளைஞர்களின் எமோஷனை சொல்லும் படம் வரவில்லை என நினைத்திருந்தேன். அதனால் பண்ணினேன். இந்த படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தியிடம் நான் வாக்குவாதம் செய்த அளவுக்கு என் வாழ்க்கையிலேயே யாரிடமும் பண்ணியதில்லை.” என பேசியது இப்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

Sivakarthikeyan speech in don success meet viral

உதயநிதி ஸ்டாலின் பேச்சு…

முன்னதாக  நிகழ்ச்சியில் பேசிய படத்தின் விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துகொண்டார். அதில் “டான் கதை முதலில் என்னிடம்தான் வந்தது. நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். கதை எனக்குப் பிடித்தது. ஆனால் கதையில் வரும் ஸ்கூல் பையன் வேடத்தில் என்னால் நடிக்க முடியாது. அதனால்தான் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நல்ல வேலை அது சிவாவிடம் சென்றுள்ளது. யார் யார் எத பண்ணனுமோ அது அமைஞ்சிருக்கு. சிபி என்கிட்ட இருந்து நீங்க எஸ்கேப் ஆகி இருக்கீங்க. ” என்று கலகலப்பாக பேசினார்.

“இது உலக சினிமா இல்ல… உள்ளூர் சினிமா…” டான் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயனின் VIRAL SPEECH வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan speech in don success meet viral

People looking for online information on Don, Lyca, Sivakarthikeyan, Udhayanidhi will find this news story useful.