COBRA D Logo Top
www.garudabazaar.com

விஷால் நடிக்கும் 'லத்தி'.. சாந்தமான லுக்கில் புதிய போஸ்டர்! விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷால், சுனைனா நடிக்கும் 'லத்தி' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

Vishal Sunaina Laththi Movie New Look Poster Released

Also Read | 18 ஆயிரம் அடி உயரத்தில் நடிகர் அஜித் குமார் பைக் ரைடு.. இமயமலையில் இருந்து வெளியான சூப்பர் PHOTOS!

தமிழில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் அதன்பிறகு நடித்த சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, இரும்புத்திரை ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது. இதையடுத்து அவர் தற்போது புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கும் லத்தி படத்தில் நடித்து வருகிறார்.

Vishal Sunaina Laththi Movie New Look Poster Released

லத்தி படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து வருகின்றனர். இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

பாலசுப்ரமணியம் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Vishal Sunaina Laththi Movie New Look Poster Released

லத்தி திரைப்படம் படம் ஐந்து மொழிகளில் PAN INDIA படமாக உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது.

Vishal Sunaina Laththi Movie New Look Poster Released

இந்நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளுடன்‌ வெளியாகி உள்ளது.‌ நடிகர் விஷால், பச்சை சட்டையில் கோயில் வாசலில் நுழைவது போல போஸ்டர் அமைந்துள்ளது. பகை சூழும் படலம் என்ற வாசகம் இந்த போஸ்டரிலும் இடம் பெற்றுள்ளது.

Vishal Sunaina Laththi Movie New Look Poster Released

கடந்த 24.07.2022 அன்று இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read | அஜித் நடித்த 'மங்காத்தா' படத்தின் 11வது வருடம்.. வெங்கட் பிரபு பகிர்ந்த இதுவரை காணாத BTS Photos!

தொடர்புடைய இணைப்புகள்

Vishal Sunaina Laththi Movie New Look Poster Released

People looking for online information on Laththi movie, Laththi Movie New Look Poster, Sunaina, Vishal will find this news story useful.