சிவகார்த்திகேயன் ‘நம்ம வீட்டு பிள்ளை' படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படத்தின்  பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்த புரமோஷன் அப்டேட்டை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த தகவலை இந்த படத்தை தயாரித்து வரும் சன்பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

Sivakarthikeyan NammaVeettuPillai First Single releasing on 23rd

சிவகார்த்திகேயன் நடித்த  'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', சீமராஜா ஆகிய படங்களுக்கு இசையமைத்த டி.இமான், இந்த படத்திற்கும் இசையமைப்பதால் முந்தைய படங்களின் ஹிட் பாடல்கள் போலவே இந்த படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பை இமான் வரும் 23ஆம் தேதி நிறைவேற்றுவார் என கருதப்படுகிறது

'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளிவரவிருப்பதாக செய்திகள் வெளிவந்தவுடன் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இதற்கான ஹேஷ்டேக்கை டிரண்ட் ஆக்கி வருகின்றனர்

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இமானுவேல் அவர்களும் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களும் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி நட்ராஜ், அர்ச்சனா, யோகி பாபு, சூரி, ஆர்கே சுரேஷ், ஆடுகளம் நரேன், ரமா உள்பட பலர் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதூர்த்தி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது