'பட்டாம்பூச்சி கண்ணால...' - வைபவின் 'சிக்ஸர்' படத்தில் இருந்து வெளியான செம மெலோடி பாடல் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 19, 2019 06:35 PM
நடிகர் வைபவ் ஹீரோவாக நடித்து வரும் படம் ‘சிக்ஸர்’. ஸ்ரீதர் மற்றும் தினேஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கி வரும் இப்படத்தில் வைபவ், சதீஷ், பலக் லால்வானி, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வால்மேட் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் பாடிய எங்கவேணா கோச்சுக்கினு போ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து பட்டாம்பூச்சி கண்ணால என்ற மெலோடி பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை அனு எழுத, இசையமைப்பாளர் ஜிப்ரான் சௌம்யா மஹாதேவனுடன் இந்த பாடலை பாடியுள்ளார்.
'பட்டாம்பூச்சி கண்ணால...' - வைபவின் 'சிக்ஸர்' படத்தில் இருந்து வெளியான செம மெலோடி பாடல் இதோ வீடியோ
Tags : Vaibhav