'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் பாண்டிராஜ், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்துக்கு இமான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் அனு இமாணுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி நடராஜன், ஆர்கே சுரேஷ், சூரி, யோகிபாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்துக்கு எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் படமான எங்க வீட்டு பிள்ளை படத்தின் தலைப்பை வைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படம் வருகிற ஆயுத பூஜையை முன்னட்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகவிருக்கிறதாம்.