'மெரினா', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படங்களுக்கு பிறகு இயக்குநர் பாண்டிராஜ் - சிவகார்த்திகேயன் 3 வது முறையாக இணைந்து ஒரு படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்துக்கு எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் பட டைட்டிலான எங்க வீட்டு பிள்ளை டைட்டிலை படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமாணுவேல், சூரி, யோகி பாபு, பாரதி ராஜா, சமுத்திரக்கனி, ஆர்கே சுரேஷ் , நட்டி நடராஜன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்த படத்துக்கு இமான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனியில் நடைபெற்றுவருகிறது.
அதற்காக சிவகார்த்திகேயன், நட்டி, பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் தேனியில் முகாமிட்டுள்ளனராம். இன்னும் ஒரு மாதத்தில் படப்பிடிப்பு நிறைவு பெறும் என்று கூறப்படுகிறது.