BREAKING : சிவகார்த்திகேயனின் "நம்ம வீட்டு பிள்ளை" முக்கிய அப்டேட் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 13, 2019 10:20 AM
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘SK16' திரைப்படத்தின் தலைப்பு மற்றும் First Look போஸ்டர் நேற்று வெளியானது.

சிவகார்த்திகேயனை ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்தவர் பாண்டிராஜ். அதைத் தொடர்ந்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனை இயக்கினார். தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK16 திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனு இம்மானுவேல், அர்ச்சனா, ரமா, ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு, வேலராமமூர்த்தி, சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி (எ) நட்ராஜ் நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றும் நிலையில் இன்று இப்படத்தின் பாடல் காட்சிகள் குமுளியில் நடைபெற்றுவருகிறது அத்துடன் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைகிறது . கிராமிய பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘நம்ம வீட்டு பிள்ளை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் செப்டம்பர் கொண்டாட்டம் என குறிப்பிடப்பட்டிருப்பதால், இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக வாய்ப்பிருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.