Breaking : எதிரிகளை அழிக்க பிரபல ஹீரோவுடன் களமிறங்கும் சிவகார்த்திகேயன்!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 21, 2019 10:45 AM
'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் பாண்டிராஜ், சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் அனு இமாணுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ், நட்டி நடராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்துக்கு இமான் இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தின் சண்டைக்காட்சிக்கான படப்பிடிப்பு தேனியில் நடைபெற்றதாம். இந்த சண்டைக் காட்சியை ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் வடிவமைத்துள்ளார். இந்த சண்டைக்காட்சியில் 50 சண்டைக் கலைஞர்கள் பங்கு பெற்றிருந்தனராம்.
இந்த சண்டைக் காட்சியின் போது நடிகர் நட்டியும் கலந்துகொண்டாராம். ஆனால் அவர் சிவகார்த்திகேயனுக்கு எதிராக சண்டை செய்யவில்லையாம். சிவகார்த்திகேயனுடன் இணைந்து வில்லனின் ஆட்களை பந்தாடுகிறாராம்.