IRAVIN NIZHAL
www.garudabazaar.com

நித்யா மேனன் & ராஷி கண்ணாவுடன் தனுஷ் ROMANTIC நடனம்.. திருச்சிற்றம்பலம் படத்தின் அடுத்த சிங்கிள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

mesmerizing melody track Megham Karukatha from Dhanush Thiruchitrambalam

Also Read | IPL நிறுவனர் லலித் மோடியுடன் திருமணமா? நடிகை சுஷ்மிதா சென் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து முடிந்தது. பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பை படக்குழுவினர் நடத்தினர்.

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் லிரிக் வீடியோ வடிவில் இன்று மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டது. 'மேகம் கருக்காதா' எனும் தொடக்க வரிகளில் பாடல் அமைந்துள்ளது. மேலும் தனுஷ் உடன் தனித்தனியாக நித்யா மேனன் & ராஷி கண்ணா ஆகியோர் நடனமாடி பாடல் வீடியோவில் தோன்றியுள்ளனர். இந்த  சிங்கிள் பாடலுக்கு நடன இயக்குனர் ஜானி  நடனம் அமைத்துள்ளார்.  பாடல் வரிகளை தனுஷ் எழுதி பாடியுள்ளார்.

இப்படத்திற்கு ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார்.

திருச்சிற்றம்பலம் படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார்.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read | துல்கர் - ராஷ்மிகா - மிருணாள் நடிக்கும் 'சீதாராமம்'.. பிரபல இயக்குனரின் மாஸ் கேரக்டர் போஸ்டர்!

நித்யா மேனன் & ராஷி கண்ணாவுடன் தனுஷ் ROMANTIC நடனம்.. திருச்சிற்றம்பலம் படத்தின் அடுத்த சிங்கிள்! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

mesmerizing melody track Megham Karukatha from Dhanush Thiruchitrambalam

People looking for online information on Dhanush, Megham Karukatha Song, Sun pictures, Thiruchitrambalam will find this news story useful.