www.garudabazaar.com

"ஐத்தலக்கா" .. பிரபல Bigg Boss நடிகருடன் கைகோர்க்கும் ராக் ஸ்டார் அனிருத்! செம சம்பவம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Anirudh Ravichander: பிரபல பாடகரும் ராக்ஸ்டார் இசையமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தர், ஒரு Video Album-ற்கான ஒரு பாடலை தனக்காகப் பாடித் தந்தில் இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் உற்சாகமடைந்துள்ளார். 

Aitha Lakka foot tapping party song bigg boss dharshan anirudh

ஐத்தலக்கா - ஆல்பம் பாடல்

கணேஷூம் அனிருத்தும் முன்பு நடிகர் விவேக்கின் எழுமின் படத்தில் இணைந்து பணியாற்றினர், இது கணேஷின் முதல் படமாகும். இந்நிலையில் "ஐத்தலக்கா" எனும் Album பாடலுக்காக மீண்டும் அனிருத்துடன் திரும்பவும் கணேஷ் சந்திரசேகரன் கைகோர்க்கிறார். இந்த ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இந்த ஆல்பத்தை உருவாக்கும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Aitha Lakka foot tapping party song bigg boss dharshan anirudh

அனிருத் எளிமையானவர்

பிக்பாஸ் புகழ் தர்ஷன் நடனமாடும் இந்த "ஐத்தலக்கா" பாடல் ஒரு தரமான பார்ட்டி குத்து பாட்டு, பாடல் என சொல்லப்படுகிறது. இப்பாடலை பதிவு செய்யும்போது அனிருத் தந்த ஒத்துழைப்பைப் பற்றி கேட்டதற்கு,  “அனி எளிமையானவர் மற்றும் எளிதில் அணுகக்கூடிய நபர்” என்று கணேஷ் கூறியுள்ளார்.

Also Read: குத்தலும் குடைச்சலும் கலந்ததுதான் வாழ்க்கை.. கணவன் மனைவி பிரிவு குறித்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை!

தொற்று சூழலில் அனிருத் செய்த சிறப்பான காரியம்

மேலும் பேசியவர், “இந்தப் பாடலைப் பற்றி எனக்கு யோசனை தோன்றியபோது, நீங்கள் பாடினால் அருமையாக இருக்கும் என்று அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். சிறிதும் யோசிக்காமல் அந்தப் பாடலைப் பாட ஒப்புக்கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு, அனியிடம் இருந்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது, அதில் எனது மின்னஞ்சலை பார்க்கும்படி கேட்டுக் கொண்டார், அதில் அவர் அப்பாடலின் பதிவுகளை அனுப்பினார்.

Aitha Lakka foot tapping party song bigg boss dharshan anirudh

நான் ஆச்சரியப்பட்டேன், ஏனென்றால் நான் அவருடைய ஸ்டுடியோவில் அவரது குரலைப் பதிவு செய்ய காத்திருந்தேன். ஆனால் தொற்றுநோய் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அனிருத் தானே பதிவுசெய்து மெயிலில் அனுப்புவதன் மூலம் கொரோனா பற்றிய விழிப்புணர்வுக்காகவும், பணியை எளிதில் முடித்துவிட்டார். இறுதி ஒலிக் கலவையை முடிக்க சில நாட்களுக்குப் பிறகு சந்தித்தோம்” என்று கூறியுள்ளார்.

Aitha Lakka foot tapping party song bigg boss dharshan anirudh

பிக்பாஸ் தர்ஷன், ஸ்ரீதர் மாஸ்டர்

கணேஷ் சந்திரசேகரன் முதன்முதலாக மியூசிக் வீடியோவில் தோன்றுவதால் மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார். இவர், தர்ஷனுடனும் ஸ்ரீதர் மாஸ்டருடனும் சேர்ந்து நடனமாடும் காட்சி இந்த ஆல்பத்தில் இடம் பெறுகிறது. டைரக்டர் லோகேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்தார்.

Aitha Lakka foot tapping party song bigg boss dharshan anirudh

லஹரி மியூசிக் நிறுவனம்

இப்பாடலுக்கு நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் எளிமையான மற்றும் தனித்துவமான சிக்னேச்சர் ஸ்டெப்பை இயற்றியுள்ளார். இது இன்ஸ்டா ரீல்கள் மற்றும் சமூக தளங்களில் வைரல் ஆகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜா குருசாமி இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார், மாயோன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மியூசிக் வீடியோவை லஹரி மியூசிக் நிறுவனம் தயாரித்துள்ள. இந்தப் பாடலை மிகவும் எதிர்பார்ப்புடன் இக்குழுவினர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: போடு சக்க! கடற்கரை.. நீச்சல் உடை.. Beast ஹீரோயின்.. தீயாய் பரவும் படு கிளாமர் Photo!

Aitha Lakka foot tapping party song bigg boss dharshan anirudh

People looking for online information on Aitha Lakka, Anirudh Ravichandar, Bigg Boss Tharshan, Ganesh Chandrasekaran, Raja Gurusamy will find this news story useful.