www.garudabazaar.com

சிவகார்த்தியேகன் cousin .. அருவி, வாழ் படங்களின் இயக்குநரின் Viral திருமண Photos.. மணப்பெண் இவங்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Arun Prabhu Purushothaman marriage: இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனுக்கு திருமணம் ஆகியுள்ளது. அவர் யாரை திருமணம் செய்துகொண்டுள்ளார் உள்ளிட்ட தகவல்களுடன், அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Sivakarthikeyan cousin Aruvi Arun Prabhu Purushothaman marriage

அருவி, வாழ் படங்களின் இயக்குநர்

கடந்த 2017-ஆம்  ஆண்டு கொடுத்த அருவி திரைப்படத்தின் மூலம் திரையுலகை மட்டுமல்லாமல், ரெகுலர் சினிமா பார்வையாளர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த மற்றும் ஒரு இளம் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். அருவி படம் விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுகளை குவித்திருந்தது.

Sivakarthikeyan cousin Aruvi Arun Prabhu Purushothaman marriage

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் அதிதி பாலன் என்கிற வழக்கத்துக்கு மாறான நாயகின் கதையை சற்றே மாடர்னாக பேச முயற்சித்த திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் பிரதீப், அருண் பிரபு புருஷோத்தமனின் அடுத்த திரைப்படத்தில் ஹீரோவானார்.

Sivakarthikeyan cousin Aruvi Arun Prabhu Purushothaman marriageஆம், கடந்த 2021-ஆம் ஆண்டு பிரதீப், டீ.ஜே.பானு, திவா தவான் மற்றும் பலரது நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் வாழ். இந்த திரைப்படமும் முதல் பாதி பெப்பியான ஒரு கதையையும் இரண்டாம் பாதி வாழ்க்கையை தேடிய நாயகனின் பயணமாகவும் அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்தார்.

சிவகார்த்தியேகன் cousin

அருண் பிரபு புருஷோத்தமனை பற்றி சொல்ல வேண்டுமானால், அவர் நடிகர் சிவகார்த்திகேயனின் மச்சான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே அண்ணாமலை எனும் தொலைக்காட்சி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றவர். இந்நிலையில் இவர் விஜய் டிவியில் பணிபுரியும் ஒருவரைத்தான் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

Sivakarthikeyan cousin Aruvi Arun Prabhu Purushothaman marriage

மணப்பெண் இவங்களா? 

இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ கடந்த ஜனவரி 21-ஆம் தேதி நடந்துள்ளது. இவர்களின் திருமணத்தை ஒட்டி திரையுலகினர் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரபல தயாரிப்பாளர் RD ராஜா உட்பட பலரும் இந்த தம்பதியருக்கு தங்களுடய வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Sivakarthikeyan cousin Aruvi Arun Prabhu Purushothaman marriage

அடுத்த படம்... 

இதனிடையே இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனின் 3வது படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும், இதற்கென ஒரு முன்னணி ஹீரோவை ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. அவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.

Also Read: ஜென்டில்மேன்-2 .. பிரம்மாண்ட மியூசிக் டைரக்டரை அறிவிச்ச தயாரிப்பாளர்.. தங்க காசு யாருக்கு?

Sivakarthikeyan cousin Aruvi Arun Prabhu Purushothaman marriage

People looking for online information on Arun Prabu Purushothaman, Arun Prabu Purushothaman marriage, Arun Prabu Purushothaman wedding, Arun Prabu Teena Marriage, Arun Prabu Teena wedding, Aruvi, அருண் பிரபு புருஷோத்தமன், Sivakarthikeyan Productions, Vaazhl will find this news story useful.