www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் பகிர்ந்த MEMORIES வீடியோ.. வாய் விட்டு சிரித்த விஜய், ஷங்கர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: 10 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியின் வீடியோவை பகிர்ந்து பழைய நினைவுகளை சிவகார்த்திகேயன் அசை போட்டுள்ளார்.

actor sivakarthikeyan old video went viral on social media

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். ஆரம்ப காலங்களில் மெமிக்ரி, டிவி தொகுப்பாளராக பணியாற்றி படிப்படியாக தமிழ் சினிமாவில் தற்போதைய உயரத்துக்கு வந்துள்ளார். இவர் தொகுப்பாளராக விஜய் டிவியில் பணியாற்றிய போது கலக்க போவது யாரு?, அது இது எது, ஜோடி நம்பர் 1 போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இது போக பல விருது நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா, பட வெற்றி விழாக்களையும் தொகுத்து வழங்கி உள்ளார்.

தளபதி, கடல் வரிசையில் அடுத்த படம்? இயக்குனர் மணிரத்னத்தின் அடுத்த பிளான் இது தானா?

இது போல 2012 ஆம் ஆண்டு, 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான நண்பன் படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா நடித்திருந்தனர். இந்த படத்தின் 100 வது நாள் விழாவை நடிகர் சிவகார்த்திகேயன், தொகுப்பாளர் கோபி நாத் தொகுத்து வழங்கினர்.

actor sivakarthikeyan old video went viral on social media

இந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ஷங்கரிடமும், அவரின் மனைவியிடமும் கேள்விகளை கேட்பார். இந்த கேள்விகள் இயக்குனர் ஷங்கருக்கும், அவருடைய மனைவிக்கும் சிரிப்பை வர வழைப்பதாக இருக்கும். இந்த சம்பவத்தை பார்த்து நடிகர் விஜய்யும் வாய் விட்டு சிரித்து விடுவார். இந்த அரிதான வீடியோவை சிவகார்த்திகேயன் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் பகிர, நடிகர் சிவகார்த்திகேயன் அதை ரீ ட்வீட் செய்து "நினைவுகள்! மிகவும் சிறப்பாக உணர்கிறேன்"  என பதிவு செய்துள்ளார்.

actor sivakarthikeyan old video went viral on social media

 

actor sivakarthikeyan old video went viral on social media

 

வளர்ந்து வரும் ஹீரோக்களில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சிவகார்த்திக்கேயனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சிவகார்த்திகேயன் டான் படத்தை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் அடுத்த படத்தில் இணைகிறார் . இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த சிவகார்த்திக்கேயன்-20 படத்தை தயாரிக்கின்றன.2022 ஜனவரி மாதத்தில் 18 ஆம் தேதியில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor sivakarthikeyan old video went viral on social media

பாக்குற நமக்கே டயர்ட் ஆவுதே... சமந்தாவே பகிர்ந்த வேற லெவல் வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

actor sivakarthikeyan old video went viral on social media

People looking for online information on சிவகார்த்திகேயன், விஜய் டிவி, Shankar, Sivakarthikeyan, Social Media, Vijay will find this news story useful.