www.garudabazaar.com

நடிகர் சூர்யா உடன் இணைந்த சிவகார்த்திகேயன்! ET படத்தின் அடுத்த தாறுமாறான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

ET Movie Sivakarthikeyan Penned a song for Suriya

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் 40வது திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இப்படம் வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நாளில் PAN INDIA படமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் லுக் வீடியோ  ஜூலை 22ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது.

ET Movie Sivakarthikeyan Penned a song for Suriya

அதனைத் தொடர்ந்து படத்தின் அடுத்த போஸ்டர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 23ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, சஸ்பென்ஸாக இரசிகர்களை ஆச்சர்யப்படுத்த ஜூலை 23 மதியம் ஒரு மணிக்கு 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரும் வெளியாகியது. போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ET Movie Sivakarthikeyan Penned a song for Suriya

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ISC ஒளிப்பதிவு செய்கிறார் இவர் சூர்யா நடித்த 'நந்தா', 'வாரணம் ஆயிரம்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.  சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் மையமாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அமைந்திருக்கலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ET Movie Sivakarthikeyan Penned a song for Suriya

இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திக்கேயன் மிக முக்கிய பங்கு வகிப்பது பற்றிய அதிகாரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் ஜனவரி 16 அன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இமான் இசையில் சும்மா சுர்ருனு எனும் பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். 

தொடர்புடைய இணைப்புகள்

ET Movie Sivakarthikeyan Penned a song for Suriya

People looking for online information on ET, ET Single, Priyanka Arul Mohan, Sivakarthikeyan, Suriya will find this news story useful.