தல அஜித்தின் 'விஸ்வாசம்' குறித்து உணர்ச்சிவசப்பட்ட இயக்குநர் சிவா
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 12, 2019 11:31 AM
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தல அஜித் நடித்து கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் 'விஸ்வாசம்'. சிவா இயக்கியுள்ள இந்த படத்துக்கு டி. இமான் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகி பாபு, ரோபோ ஷங்கர், அனிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் மாற்றுத்திறனாளிகளுக்காக சென்னை சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது.
அந்த நிகழ்வில் இயக்குநர் சிவா, நடிகை ரேவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் பேசிய சிவா, இது ஒரு அற்புதமான அனுபவம். எனக்கு முதல் நாள், முதல் காட்சி பார்க்கும் போது என்ன மாதிரியான சந்தோஷம் ஏற்பட்டதோ, அதற்கு சரிசமமாக இப்பொழுது ஏற்பட்டுள்ளது.
இந்த தருணம் எனக்கு கடவுள் கொடுத்த வரம். இவ்ளோ ரசிக்கிறீங்க. அதை பார்க்கும் போது வாழ்க்கையில் நாம் ஏதோ செய்திருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த சந்தோஷத்தை கொடுத்த உங்க எல்லோருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
'விஸ்வாசம்' திரைப்படம் ஜனவரியில் வெளியானது. அதன் பிறகு நிறைய பேர் என்னை பாராட்டுனாங்க. எங்க டீம் ரொம்ப சந்தோஷபட்டோம். அதற்கு மகுடம் வைப்பது போல இந்த நிகழ்வு நடந்திருக்கிறது என்று நெகிழ்வுடன் கூறினார்.
தல அஜித்தின் 'விஸ்வாசம்' குறித்து உணர்ச்சிவசப்பட்ட இயக்குநர் சிவா வீடியோ