Lal SIngh D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

BOX OFFICE: இந்தியாவிலும் அமெரிக்காவிலும் செம வசூலை அள்ளும் 'சீதா ராமம்' திரைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துல்கர் சல்மான்- ஹனு ராகவபுடி - வைஜெயந்தி மூவிஸ் & ஸ்வப்னா சினிமா கூட்டணியில் உருவான ‘சீதா ராமம்’ வெளியான முதல் வாரத்தில் 40 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

Sita Ramam Movie World Wide Box Office Collection 40 Crores

Also Read | LIGER படத்தின் ப்ரோமோஷன்.. வயலில் டிராக்டர் ஓட்டிய விஜய் தேவரகொண்டா & அனன்யா பாண்டே!

‘சீதா ராமம்’ படத்தின் வசூல் பயணம், சாதனையுடன் தொடரும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள். 

காவிய காதல் கதையான 'சீதா ராமம்' கதையை பார்வையாளர்களும், விமர்சகர்களும் எல்லையற்ற வகையில் காதலித்து வருகின்றனர். போரின் பின்னணியில் நடைபெறும் உணர்வுபூர்வமான காதல் கதை என்பதால், பார்வையாளர்களுக்கு மனதிற்கு நெருக்கமான சுகானுபவத்தை  அளித்து வருகிறது.

திரை காதல் ஜோடிகளான துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் தனித்துவமான நடிப்பு... இயக்குநர் ஹனுராகவபுடியின் கவித்துவமான எழுத்து மற்றும் பிரத்யேகமான இயக்கம். .. விஷால் சந்திரசேகரின் மதிமயக்கும் இசை... பி எஸ் வினோத்தின் வியக்கத்தக்க ஒளிப்பதிவு.. ஸ்வப்னா சினிமா - வைஜெயந்தி மூவிஸ் போன்ற முன்னணி படத் தயாரிப்பு நிறுவனத்தின் தரமான தயாரிப்பு மற்றும் வெளியீடு... ஆகிய காரணங்களுக்காகவும் இப்படத்தினை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

Sita Ramam Movie World Wide Box Office Collection 40 Crores

நடிகர் துல்கர் சல்மான், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்த காவிய காதல் கதையான 'சீதா ராமம்', உலகம் முழுவதும் பார்வையாளர்களின் இதயங்களை வென்று வருகிறது. படம் வெளியான தருணத்திலிருந்து ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களால் படத்தின் வசூல் ஏறுமுகத்துடன் தொடர்கிறது.

Sita Ramam Movie World Wide Box Office Collection 40 Crores

பொது விடுமுறை மற்றும் மக்களின் நேர்மறையான வாய்மொழி விமர்சனங்களால் திரையரங்குகளை நோக்கி ஏராளமானவர்கள் படையெடுத்ததால், திரையரங்குகள் ரசிகர்களால் நிரம்பிவழிந்தன. இதன் காரணத்தால்  முதல் வாரத்தில் ‘சீதா ராமம்’ உலகளவில் 40 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

Sita Ramam Movie World Wide Box Office Collection 40 Crores

வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மட்டுமல்லாமல் சிறுநகரங்களில் இருக்கும் ஒற்றை திரையரங்குகளிலும் 'சீதா ராமம்' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்க்கப்பட்டதை அதிகமாக வசூலிக்கும் என திரை உலக வணிகர்கள் கணித்துள்ளனர். மேலும் இப்படத்தின் வசூல் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Sita Ramam Movie World Wide Box Office Collection 40 Crores

அமெரிக்காவின் பாக்ஸ் ஆபிஸிலும் இந்த படம்,  பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. இதுவரை படத்தின் மொத்த வசூல் 850 K அமெரிக்க டாலரைக் கடந்துள்ளது.  'சீதா ராமம்' படம் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | திருச்சிற்றம்பலம் படத்துக்காக GAME விளையாடிய பிரியா பவானி சங்கர்.. SUN PICTURES வெளியிட்ட அசத்தலான VIDEO!

Sita Ramam Movie World Wide Box Office Collection 40 Crores

People looking for online information on Dulquer salmaan, Mrunal Thakur, Rashmika Mandanna, Sita Ramam, Sita Ramam Movie Box office collection will find this news story useful.