Lal SIngh D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

LIGER படத்தின் ப்ரோமோஷன்.. வயலில் டிராக்டர் ஓட்டிய விஜய் தேவரகொண்டா & அனன்யா பாண்டே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே நடித்த லைகர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

LIGER Vijay Devarakonda Ananya Panday in the green fields of Chandigarh

Also Read | பிரபல போட்டோகிராபருடன் இணைந்து நடிகை ஸ்ருதி ஹாசன் ஃபேஷன் போட்டோஷூட்! வைரல் ஃபோட்டோஸ்

பிரபல உலக குத்துசண்டை வீரர்  மைக் டைசன் இந்தியத் திரையில் முதல் முறையாக அறிமுகமாகும் இந்த, அதிரடி ஆக்சன்  திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக நடித்துள்ளார்.

Puri connects  மற்றும்  பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

LIGER Vijay Devarakonda Ananya Panday in the green fields of Chandigarh

லைகர் திரைப்படம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில்  ஆகஸ்ட் 25, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

LIGER Vijay Devarakonda Ananya Panday in the green fields of Chandigarh

அதனை முன்னிட்டு படக்குழு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக படக்குழு குஜராத் சென்றனர். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். தற்போது பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு சென்றுள்ளனர். சண்டிகரில் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் கோகா 2.0 வெளியிடப்பட்டது. இந்நிகழ்வுக்கு முன் வயல் வெளிகளில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே டிராக்டர் ஓட்டிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.  விஜய் தேவரகொண்டா டிராக்டரை ஓட்ட அனன்யா பாண்டே அருகில் அமைந்துள்ளது போல புகைப்படங்கள் அமைந்துள்ளன.

LIGER Vijay Devarakonda Ananya Panday in the green fields of Chandigarh

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல நடிகர்  ஆர்.கே. சுரேஷ் தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த லைகர் (சாலா கிராஸ்பிரீட்) LIGER (Saala Crossbreed) படம் ஏற்கனவே சென்சாராகி உள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

LIGER Vijay Devarakonda Ananya Panday in the green fields of Chandigarh

மேலும்  படம் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் முதல் பாதி 1 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடும் என்றும், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. படத்தில் 7 சண்டை காட்சிகளும் 6 பாடல் காட்சிகளும் உள்ளன என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

Also Read | பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் A.R.ரஹ்மான் பாடிய "பொன்னி நதி"! செம மாஸ் GLIMPSE!

LIGER படத்தின் ப்ரோமோஷன்.. வயலில் டிராக்டர் ஓட்டிய விஜய் தேவரகொண்டா & அனன்யா பாண்டே! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

LIGER Vijay Devarakonda Ananya Panday in the green fields of Chandigarh

People looking for online information on Ananya Panday, Liger, Liger Movie, Vijay Deverakonda will find this news story useful.