Nna Thaan Case Kodu: "தியேட்டருக்கு வரும் வழியில் பள்ளம் இருக்கலாம்.!" - மலையாள பட போஸ்டரால் பரபரப்பு.!
முகப்பு > சினிமா செய்திகள்ஆலப்புழா: கேரளாவில் 'ந்நா தான் கேஸ் கொடு' திரைப்படத்தின் போஸ்டர் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மலையாளத்தில், ‘ஆன்ராய்டு குஞ்சப்பன்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ரதீஷ் பாலகிருஷ்ணன் பொதுவால் இயக்கியுள்ள திரைப்படம் 'ந்நா தான் கேஸ் கொடு' (Nna, Thaan Case Kodu). இந்த திரைபடம் இந்த ஆகஸ்ட் 11, 2022 அன்று திரையரங்குகளில் வெளியானது.
குஞ்சாகோ போபன், காயத்ரி , சைஜூ குரூப், வினய் போர்ட், ஜாபர் இடுக்கி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான விளம்பர போஸ்டராக உருவாகி பத்திரிகைகளில் வெளியான போஸ்டர்தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் உள்ள பள்ளங்கள் ஏற்படுத்தும் சம்பவம், ஒரு திருடனின் வாழ்க்கையை எப்படி திசைமாற்றுகிறது என்பதை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் விளம்பர போஸ்டரில் இடம் பெற்ற மேற்குறிப்பிட்ட வாசகம் இப்போது கேரளாவில் வைரலாகி வருகிறது. ஆம், அந்த போஸ்டரில் "தியேட்டருக்கு வரும் வழியில் பள்ளங்கள் இருக்கலாம். ஆனாலும் படத்துக்கு வரவேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளதுதான் அந்த தரமான சம்பவம்.
இதுகுறித்து சிலர், சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும்.. என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். இதேபோல் கேரள பொதுப்பணித்துறை அமைச்சரும், கேரள முதல்வர் பினராயி விஜயனின் மருமகனுமான முகமது ரியாஸ் இதுபற்றி பேசியுள்ளார்.
அதில், “அது சினிமா விளம்பரம்தான்.. அதை சினிமா போலவே பார்த்தால் போதும். சாலைகளில் பள்ளங்கள் உருவாவது என்பது கேரளம் உருவானது முதல் உள்ள பிரச்சனை.. அவற்றை சரி செய்வது அவசியமானது தான். சாலை பாதுகாப்பை மேம்படுத்த பல திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. புதிய தொழில்நுட்பங்கள் மூலமும் இதை சரிசெய்ய ஆலோசிக்கிறோம்" என்று
இதுகுறித்து இப்படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளரான குஞ்சக்கோ போபன் இது தொடர்பாக பேசுகையில், “இந்த படத்தில் சாலைகளில் உள்ள பள்ளம் ஒரு பிரச்சனையாக காட்டப்படவில்லை. ஆனால் அதுவும் ஒரு முக்கிய காரணம். ஒரு பள்ளம் எப்படி ஒருவரின் வாழ்க்கையை பாதித்தது என்பதை தான் நகைச்சுவை கலந்து உணர்வு பூர்வமாக சொல்ல முயன்றுள்ளோம்.
குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ, அரசையோ இந்தப் படம் குறிக்கவில்லை. குறிப்பாக கேரள அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அந்த விளம்பரமும் செய்யப்படவில்லை. சாமானியர்களின் வாழ்வில், பல்வேறு வழியிலும் எழும் பிரச்சனைகளில் ஒரு கருவை இப்படம் பேசுகிறது.” என்று கூறியுள்ளார்.