பிரபல நடிகர் அக்ஷய் குமார், தெரு நாயின் பசியறிந்து பிஸ்கட் ஊட்டிவிட்ட வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இவர், பாலிவுட்டில் காதல், காமெடி, ஆக்ஷன், வில்லன் என்று அனைத்து ரோலிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே மாஸ் ஹீரோவாக காட்டியவர்.
இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் சூர்யவன்ஷி என்ற படத்தின் ஷூட்டிங்ஸ் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். ஷூட்டிங்கின் போது, அங்கு ஒரு தெரு நாய் பசியுடன் அங்கும் இங்குமாக அலைவதை பார்த்துள்ளார். உணவு இடைவேளையின் போது, அந்த நாய் பசியுடன் இருப்பதை அறிந்த அக்ஷய் குமார், தான் வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஊட்டி விட்டார். அதனை வீடியோவாக எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Had a rather hungry visitor stop by the set during lunch today...finished off all the biscuits in a jiffy. #SuchAGoodBoy pic.twitter.com/aMpiBBIvfN
— Akshay Kumar (@akshaykumar) May 11, 2019