வந்துட்டாருல சும்மா ராஜா மாதிரி..- மாநாட்டிற்கு அடிக்கல் நாட்டும் சிம்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘வந்தா நாஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

STR - Venkat Prabhu's Maanadu shoot will begin on June 21st

வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் குறித்த அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டிருந்தார். அவரது ட்வீட்டில், ‘எஸ்.டி.ஆர் இஸ் பேக்.. மாநாடு ஷூட்டிங் மே மாதம் முதல் தொடங்குகிறது’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நமக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி, இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இதற்கான லொகேஷன் தேடும் பணியில் சில தாமதம் ஏற்படுவதால் படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன்.21ம் தேதி முதல் தொடங்கும் எனவும் தெரியவந்துள்ளது. சமீபத்தில் லண்டன் சென்றிருந்த நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்து அசத்தலான கெட்டப்பில் தோற்றமளிக்கிறார்.

இதனால் ‘மாநாடு’ படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் சிம்புவின் அரசியல் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எனினும், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.