சமந்தா நடிப்பில் 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இந்த படத்தில் தியாகராஜன் குமாரராஜா இயக்க, விஜய் சேதுபதி, மிஷ்கின், பஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இதனையடுத்து சமந்தா 'ஓ பேபி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். மேலும், நாக சூர்யா, லக்ஷ்மி, ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு மிக்கி ஜே. மேயர் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் தனது கேரக்டர் லுக்கை சமந்தா தனது ட்விட்டர் பக்கம் மூலமாக வெளியிட்டார். இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
'என்னோட என்ஜாய்மென்ட் ஒரே மாதிரி இருக்காது, பார்த்தீங்களா ?' - சமந்தாவின் ஓ!பேபி டீஸர் இதோ வீடியோ