‘மாநாடு’ இல்லைன்னா என்ன..? - அதிரடியாக அறிவிக்கப்பட்ட சிம்புவின் அடுத்தப்படம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 14, 2019 01:04 PM
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படத்தை சிம்புவே இயக்கி நடிக்கவிருக்கிறார். ‘மகாமாநாடு’ என்று கூறப்படும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த ‘மாநாடு’ திரைப்படம் கைவிடப்படுவதாகவும், இப்படம் வேறு நடிகரை வைத்து உருவாகும் என்றும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அறிவித்தனர்.
இந்த முடிவுக்கு சிம்பு தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்படாத நிலையில், தற்போது ‘மகாமாநாடு’ என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது அரசியல் சார்ந்த திரைப்படமா என்பது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், சூப்பர்ஹிட் படமான ‘வல்லவன்’ திரைப்படத்திற்கு பின் சிம்புவின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.