விஷ்ணு விஷாலுடன் கவுதம் மேனன் கூட்டணி ‘ஆனா ஒரு TWIST'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடித்து வரும் படத்துக்கு எஃப்.ஐ.ஆர் என்று பெயர்சூட்டி உள்ளனர்.

Gautham Vasudev Menon acts in Vishnu Vishal's FIR

புதுமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கும் இந்த திரைப்படத்தில் இவருடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் இயக்குநர் கவுதம் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அந்த வேடம்பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. கவுதம் மேனன் ஏற்கெனவே தன்னுடைய சில படங்களில் சிறப்புத் தோற்றங்களிலும், துல்கர் சல்மான் நடித்த ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ பட த்தை இயக்கிய செல்லா அய்யாவுவின் இயக்கத்தில் நடிக்க உள்ளது குறிப்பிட த்தக்கது.

Entertainment sub editor