STR இஸ் பேக்..! மீண்டும் தொடங்கும் சிம்புவின் 'மாநாடு' -விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 06, 2019 09:03 AM
வெங்கட் பிரபு சிம்புவை ஹீரோவாக வைத்து 'மாநாடு' படத்தை இயக்குவதாக இருந்தது. சில காரணங்களால் அந்த படம் நடைபெற தாமதமானது. அந்த படம் சிம்பு தவிர்த்து வேறு நடிகரை வைத்து தொடங்கப்படும் என்பது போன்று அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.
![STR back in Suresh Kamatchi Venkat Prabhus Maanaadu STR back in Suresh Kamatchi Venkat Prabhus Maanaadu](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/str-back-in-suresh-kamatchi-venkat-prabhus-maanaadu-news-1.jpeg)
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ‘மாநாடு’ என்ற தலைப்பில் அரசியல் கதைக்களம் சார்ந்த திரைப்படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இப்படத்தின் ஷூட்டிங்கை மலேசியாவில் தொடங்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து காலதாமதமாகி வருவதால் சிம்பு நடிக்க இருந்த ‘மாநாடு’ திரைப்படம் கைவிடப்படுவதாக சில நாட்களுக்கு முன் இப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது சுரேஷ் காமாட்சி சிம்புவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ட்வீட் செய்துள்ளார்.
விரைவில் str in மாநாடு படபிடிப்பு தேதி அறிவிக்கப்படும். pic.twitter.com/Zl6t5YOXvH
— sureshkamatchi (@sureshkamatchi) November 5, 2019