500 அடியில் போஸ்டர்..!- சிம்புவை கொண்டாடும் மதுரை STR வெறியர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு திரையுலகில் அறிமுகமாகி 35 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சமூக வலைதளங்களில் மட்டுமல்லாது தமிழகத்தில் பல பகுதிகளிலும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Simbu fans celebrated 35 years of Simbuism in Madurai by posting 500ft wall poster

சிம்புவின் தந்தையும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் ‘உறவைக் காத்த கிளி’ திரைப்படத்தின் மூலம் கடந்த 1984ம் ஆண்டு ஒரு வயது குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார் சிம்பு.

சிம்புவின் 35 ஆண்டு திரையுல பயணத்தை கொண்டாடும் வகையில், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சுமார் 500 அடி நீள போஸ்டர் ஒட்டி அசத்தியுள்ளனர். மதுரை சிட்டி STR வெறியர்கள் ரசிகர் மன்றத்தின் சார்பில் சிம்பு நடித்த புதுப்பட ரிலீஸ், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதேபோல், தற்போது சிம்புவின் 35 ஆண்டுகால திரை பயணத்தை வாழ்த்தி புதிய முயற்சியாக 500 அடி நீள போஸ்டரை ஒட்டி வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும், கவுதம் கார்த்திக்குடன் இணைந்து கன்னடத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘மஃப்டி’ திரைப்படத்தின் ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.