'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துக்கு பிறகு சிம்பு ஹீரோவாக நடிக்கும் படம் 'மாநாடு'. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
இந்த படம் குறித்து புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சிம்பு மாநாடு படத்தின் ஸ்கிரிப்ட் வைத்து படித்துக்கொண்டிருக்கிறார். கேமரா மெல்ல அவர் முகத்தை நோக்கி நகர்கிறது. பின்னணியில் மன்மதன் பிஜிஎம் ஒலிக்க பக்கா மாஸாக காட்சியளிக்கிறார்.
#MaanaaduLOADING #STR @sureshkamatchi @vp_offl @thisisysr @kalyanipriyan pic.twitter.com/YqGOXKhB4Z
— Hariharan Gajendran (@hariharannaidu) July 1, 2019