‘எங்க கெமிஸ்ட்ரிய விட அவங்க கெமிஸ்ட்ரி தான் வேற லெவல்..’- ஓவியா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா உள்ளிட்டோர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘களவாணி’. கடந்த 2010ம் ஆண்டு வெளியான இப்படம் யதார்த்தமான காதல், காமெடி என ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

Oviyaa tells about Chemistry among Saranya and Ilavarasan than Oviya-Vimal pair in Kalavani 2

அதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் களவாணி 2 என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்தையும் சற்குணம் இயக்கி வருகிறார். இதிலும், விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன், இளவரசன், கஞ்சா கருப்பு, ஆர்ஜே விக்னேஷ்காந்த்,  உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஜூலை.5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் ப்ரஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு பேசிய நடிகை ஓவியா முதன் முறையாக தனக்கு யார் இந்த பெயரை வைத்தது என்பதை பகிர்ந்துக் கொண்டார்.

ஓவியா பேசுகையில், ‘கிட்டதட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களவாணி குடும்பத்துடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. களவாணி படம் தான் எனக்கு முதல் படம். ஓவியா என எனக்கு பெயர் வைத்ததே சற்குணம் சார் தான். இந்த படத்தில் எனக்கும் விமலுக்கு இருக்கும் கெமிஸ்ட்ரியை விட சரண்யா மேம்-இளவரசன் சார் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி தான் சூப்பரா இருக்கும்’ என்றார்.

ஓவியாவை தொடர்ந்து பேசிய நடிகை சரண்யா, ‘களவாணி படத்தின் போது யார் ஹீரோயின் என்று கேட்டால் புதுமுக நடிகை ஓவியா என்றேன். இப்போது ஓவியா என்று சொன்னால் அட ஓவியாவா என்று கூறுகிறார். மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராகிவிட்டர் ஓவியா. அவரது வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது’ என கூறினார்.

‘எங்க கெமிஸ்ட்ரிய விட அவங்க கெமிஸ்ட்ரி தான் வேற லெவல்..’- ஓவியா வீடியோ