இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, யுவன் இந்த படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.
இதனையடுத்து ஸ்டுடியோ கிரீன் புரொடக்ஷன் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக் நடிக்கவிருக்கிறார்.
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மஃப்டி படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. இந்த படத்தில் நடிக்க 25 நாட்கள் சிம்பு கால்ஷீட் கொடுத்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருந்தன.
மேலும் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தில் வரும் சனிக்கிழமையுடன் இந்த படத்தில் சிம்பு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பில் சிம்பு ஒரு சன் கிளாஸ் வாங்கி அதை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தியுள்ளாராம். அந்த சன் கிளாஸை பார்த்த கௌதம் கார்த்திக்கிற்கு அது பிடித்திருக்கிறது. உடனே அதனை சிம்பு தன் ஆட்டோகிராஃபை போட்டு, கௌதம் கார்த்திக்கிற்கு பரிசளித்திருக்கிறார்.
அதனை பகிர்ந்த தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். அதில், ''சிம்பு ரசிகர்களே, அவர் நல்ல மனிதாபிமானம் மிக்க மனிதர். பரந்த இதயம் கொண்டவர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
For the #STR fans out there! He is such a gem of a human being! Big heart ❤!
Thank you brother! You rock! 😎🤘🏻 pic.twitter.com/SeMLnCE3r5
— Gautham Karthik (@Gautham_Karthik) June 26, 2019