கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அங்குள்ள திரையரங்குகளில் விஜய் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படங்களை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தை போலவே கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், வரும் ஜூன்.22ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் வரவுள்ளதை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் கேரளாவில் சுமார் 33 மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் விஜய் நடித்த படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த ரீ-ரிலீஸ் கொண்டாட்டம் வரும் ஜுன்.30ம் தேதி வரை தொடரும். எந்த மாவட்டத்தில் எந்தெந்த திரையரங்குகளில் விஜய் நடித்த எந்த திரைப்படங்கள் சிறப்புக் காட்சிகளாக மீண்டும் வெளியாகும் என்ற லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.
தற்போது இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது.
மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
In order to celebrate #ThalapathyVijay's birthday in Kerala, 33 theatres are releasing following movies as a special show on 22-06-2019. #ThalapathyBirthdayCelebration #ThalapathyVIJAYBdayMonth #Mollywood #Kollywood pic.twitter.com/P8tkMeYg95
— Behindwoods Ice (@behindwoods_ice) June 16, 2019