விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் முதல் எலிமினேஷன் இந்த வாரம் நடைபெறவுள்ளது. மக்கள் அளித்திருக்கும் வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள 16 போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவார்.

இந்த சீசனில் முதல் வார எவிக்ஷனுக்கு ஃபாதிமா பாபு, கவின், மதுமிதா, மீரா, சாக்ஷி அகர்வால், சேரன், சரவணன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறவுள்ளனர்.
இந்நிலையில், பிக் பாஸ் சீசனின் இன்றைய எபிசோடிற்கான இரண்டாவது புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ‘ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் யாரை வெளியேற்ற விரும்புகிறார்கள் என்பதை அங்கு வைக்கப்பட்டுள்ள போர்டில் குறிப்பிட வேண்டும். அதில் வனிதா அனைவரது சார்பாகவும் மதுமிதாவை வீட்டைவிட்டு வெளியேற்ற விரும்புவதாக கூறுகிறார்.
பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மதுமிதாவை டார்கெட் செய்தாலும், மக்கள் தங்களது ஓட்டுகளின் மூலம் யாரை காப்பாற்ற நினைக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மொத்தமாக எதிர்க்கும் ஹவுஸ்மேட்ஸ்.. மக்கள் வெளியேற்ற விரும்புவது யாரை..?-பிக் பாஸ் புரொமோ வீடியோ