www.garudabazaar.com
iTechUS

அடேங்கப்பா.. சித்தார்த் - கியாரா திருமணத்துக்கு.. 10 நாடுகளில் இருந்து வந்த உணவு Variety.. லிஸ்ட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் சித்தார்த் மல்ஹோத்ரா. இவர் ஏக் வில்லன், ஷேர்ஷா, மிசன் மஜ்னு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் சித்தார்த் பிரபலம் அடைந்தவர்.

Sidharth and Kiara Advani marriage food varieties deets

Images are subject to © copyright to their respective owners.

Also Read | தைப்பூசத்தில் முருகனுக்காக மனமுருகி பாடிய சித் ஸ்ரீராம்..! பார்த்திபன் நெகிழ்ச்சி கமெண்ட்..

இதே போல, தோனி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்தவர் நடிகை கியாரா அத்வானி. இதனைத் தொடர்ந்து கபீர் சிங், குட் நியூஸ், ஷேர்ஷா உள்ளிட்ட பல படங்களிலும் கியாரா அத்வானி நடித்துள்ளார்.

தொடர்ந்து, பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இன்னும் பெயரிடப்படாத "RC 15" என்ற குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படத்திலும் கியாரா நடித்து வருகிறார். ராம் சரண் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை கியாரா ஆகியோர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வந்தது. முன்னதாக, அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் தகவல் தெரிவிக்கும் நிலையில், கடந்த சில தினங்களாக அவர்கள் திருமணம் குறித்த தகவல்கள் தான் இணையத்தை அதிகம் ஆக்கிரமித்திருந்தது.

Sidharth and Kiara Advani marriage food varieties deets

Images are subject to © copyright to their respective owners.

இதனைத் தொடர்ந்து, சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா திருமணம், பிப்ரவரி 07 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திருமணத்தில் இந்திய சினிமாவின் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றது. அதே போல, திருமணத்திற்கு முன்பாக தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்து வருவதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

Sidharth and Kiara Advani marriage food varieties deets

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், சித்தார்த் - கியாரா திருமணத்தில் இடம்பெற்றுள்ள உணவு குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, மொத்தம் 10 நாடுகளில் இருந்து 100 உணவு வகைகள் விருந்தினர்களுக்கு பரிமாற்றப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும், இவர்கள் திருமணம், ராஜஸ்தானின் ஜெய்சல்ம்ரில் உள்ள சூர்யகார் அரண்மனையில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

Also Read | TP Gajendran : "தந்தை இறந்தும் ஷூட்டிங்".. பொறுப்பு தவறாமை..!.. மறைந்த இயக்குநர் கஜேந்திரனின் மறுபக்கம்.!

Sidharth and Kiara Advani marriage food varieties deets

People looking for online information on Kiara Advani, Sidharth, Sidharth and Kiara Advani marriage will find this news story useful.