பெரும் சோகம்! பிரபல தமிழ் - மலையாள நடிகை KPAC லலிதா.. திடீர் மரணம்! RIP KPAC Lalitha
முகப்பு > சினிமா செய்திகள்சென்னை, 22, பிப்ரவரி 2022: பிரபல காதலுக்கு மரியாதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த, அனுபவமிக்க மலையாள மற்றும் தென்னிந்திய நடிகை KPAC லலிதா காலமானார். அவருக்கு வயது 74.
KPAC லலிதா
தென்னிந்தியா முழுவதும் சுமார் 550 திரைப்படங்களில் நடித்த நடிகை KPAC லலிதா. இவர் தேவர் மகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குநர் பரதனின் மனைவி ஆவார். இவருடைய மகன் சித்தார்த் பரதன் மிக பிரபலமான நடிகர் மற்றும் இயக்குநர்.
தேசிய விருது பெற்ற தமிழ் - மலையாள நடிகை
நடிகை KPAC லலிதா, தமிழில் காதலுக்கு மரியாதை, உள்ளம் கேட்குமே, பரமசிவன், கிரீடம், அலைபாயுதே, மாமனிதன் என பல திரைப்படங்களில் நடித்தவர் இவர். மலையாள திரையுலகில் லலிதா சேச்சி என அன்போடு அனைவராலும் அழைக்கப்படும் நடிகை 1991 மற்றும் 2001-ம் ஆண்டுகளுக்கான சிறந்த துணை நடிகைக்கான இந்திய தேசிய விருதையும், 4 முறை கேரளாவின் மாநில அரசு விருதையும் பெற்றுள்ளார்.
பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்..
கடந்த 2021-ஆம் வருடம் நவம்பர் மாதம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர், தற்போது காலமானார். இவரது இந்த மறைவு செய்தி கேட்டு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள்ள் நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள் மட்டுமல்லாது பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.