www.garudabazaar.com
iTechUS

தேதி மாற்றப்பட்ட ஷங்கர் - ராம்சரண் இணையும் RC15 படத்தின் Song ஷூட்..? இதுதான் காரணமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழின் மூலம் அறியப்பட்ட பிரம்மாண்ட இந்திய இயக்குனர்களுள் ஒருவரான ஷங்கர் இயக்கி வரும் இன்னும் பெயரிடப்படாத  திரைப்படம் "RC 15". இதில் தென்னிந்திய பிரபல மாஸ் ஹீரோவான ராம் சரண் நாயகனாக நடித்து வருகிறார்.

Ramcharan Shankar RC 15 song shoot rescheduled to Feb 9th Due to Sidharth Kiara wedding

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Varisu : மெகா பிளாக் பஸ்டர்..!! ‘வாரிசு’ உலகளாவிய கலெக்‌ஷன் ரிப்போர்ட்..! வெளியான அறிவிப்பு.!

இந்நிலையில் இன்று படப்பிடிப்பு பண்ணுவதாக இருந்த இப்படத்தின் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கியாரா சித்தார்த்தின் திருமணம் காரணமாக இந்த படப்பிடிப்பு தள்ளிப் போயிருப்பதாக தெரிகிறது. 

ஆம், பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் சித்தார்த் மல்ஹோத்ரா. இவர் ஏக் வில்லன், ஷேர்ஷா, மிசன் மஜ்னு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் சித்தார்த் பிரபலம் அடைந்தவர். இதே போல, தோனி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்தவர் நடிகர் கியாரா அத்வானி. இதனைத் தொடர்ந்து கபீர் சிங், குட் நியூஸ், ஷேர்ஷா உள்ளிட்ட பல படங்களிலும் கியாரா அத்வானி நடித்துள்ளார்.

Ramcharan Shankar RC 15 song shoot rescheduled to Feb 9th Due to Sidharth Kiara wedding

Images are subject to © copyright to their respective owners.

கியாரா அத்வானி  RC 15 படத்தில் நடித்து வருகிறார்.  இவருக்கும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும்தான், வரும் பிப்ரவரி 07 ஆம் தேதி , ராஜஸ்தானின் ஜெய்சல்ம்ரில் உள்ள சூர்யகார் அரண்மனையில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இதன் காரணமாக RC 15 படத்தின் இன்று படப்பிடிப்பு பண்ணுவதாக இருந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Also Read | ஃபீல் குட் காமெடி ஜானரில் யோகிபாபு நடிக்கும் புதிய படம்.. செம்ம டைட்டில்.. ஒன்லைன் இதுதான்.!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ramcharan Shankar RC 15 song shoot rescheduled to Feb 9th Due to Sidharth Kiara wedding

People looking for online information on Ramcharan, RC 15, Shankar will find this news story useful.