www.garudabazaar.com
iTechUS

TP Gajendran : "தந்தை இறந்தும் ஷூட்டிங்".. பொறுப்பு தவறாமை..!.. மறைந்த இயக்குநர் கஜேந்திரனின் மறுபக்கம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குனராக இருந்த டி.பி. கஜேந்திரன் சமீபத்தில் மரணம் அடைந்த விஷயம், ஒட்டுமொத்த திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தி இருந்தது.

Director TP Gajendran shooting movie after his father demise

Images are subject to © copyright to their respective owners.

Also Read | காஷ்மீர் Case?.. 'விக்ரம்' அமருக்கும்.. LEO படத்துக்கும் இப்படி ஒரு தொடர்பா? அப்போ LCU தானா?.

சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்த டி.பி. கஜேந்திரன், சென்னை சாலிகிராமம் அருணாசலம் சாலையில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69.

பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம், சீனா தானா, எங்க ஊரு காவல்காரன், பாட்டு வாத்தியார், பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட பல திரைப்படங்களை டி.பி. கஜேந்திரன் இயக்கி உள்ளார்.

இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்திருந்தனர். டி.பி. கஜேந்திரன் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஏராளமான பிரபலங்களும் உடலுக்கு நேரில் வந்த அஞ்சலி செலுத்தி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, டி.பி. கஜேந்திரன் உடலுக்கு இறுதிச் சடங்கும் செய்யப்பட்டிருந்தது. டி.பி. கஜேந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகும், தொடர்ந்து அவர் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி, பலரையும் உருக்கம் அடைய வைத்து வருகிறது.

Director TP Gajendran shooting movie after his father demise

Images are subject to © copyright to their respective owners.

அந்த வகையில், மறைந்த இயக்குனர் டி.பி. கஜேந்திரன் குறித்து நடிகர் ராஜா திருமகன் SU செந்தில்குமரன் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பாட்டு வாத்தியார் என்ற ஒரு படம் இயக்கினார். ஷூட்டிங்  நடக்கும் போது அவரது அப்பாவின் மரணம் பற்றிய செய்தி வந்தது.

உடனே  கிளம்பினால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வரும். மறுநாள் முழுக்க இருந்து படப்பிடிப்பு முடிந்த  உடன் அழுதபடி காரில் ஏறி  கிளம்பினார்" என குறிப்பிட்டுள்ளார்.

Director TP Gajendran shooting movie after his father demise

Images are subject to © copyright to their respective owners.

அதே போல, இதுபற்றி தான் பத்திரிக்கையில் எழுதி இருந்த போது, அதனை அறிந்து ஒரு வருடம் கழித்து தன்னை பற்றி எழுதியதை குறிப்பிட்டு குழந்தை போல தன்னிடம் கஜேந்திரன் மனம் நெகிழ்ந்ததாகவும் ராஜா திருமகன் குறிப்பிட்டுள்ளார். தனது தந்தை மறைந்த சமயத்திலும் அர்ப்பணிப்புடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பின்னர் கண்ணீருடன் சென்ற டி.பி. கஜேந்திரன் குறித்த தகவல், தற்போது பலரையும் மனம் நொறுங்க வைத்துள்ளது.

Also Read | தைப்பூசத்தில் முருகனுக்காக மனமுருகி பாடிய சித் ஸ்ரீராம்..! பார்த்திபன் நெகிழ்ச்சி கமெண்ட்..

TP GAJENDRAN : "தந்தை இறந்தும் ஷூட்டிங்".. பொறுப்பு தவறாமை..!.. மறைந்த இயக்குநர் கஜேந்திரனின் மறுபக்கம்.! வீடியோ

மேலும் செய்திகள்

Director TP Gajendran shooting movie after his father demise

People looking for online information on TP Gajendran will find this news story useful.