சோகம்!! இளம் பிக்பாஸ் வின்னர் & தமிழில் ஒளிபரப்பான பிரபல சீரியலின் நடிகர் மரணம்!
முகப்பு > சினிமா செய்திகள்இந்தி 'பிக்பாஸ்' பிரபலமான சித்தார்த் சுக்லா திடீரென மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் நடிகரான சித்தார்த் சுக்லா 2005ஆம் ஆண்டு உலகின் சிறந்த மாடல் என்ற பட்டத்தை வென்றுள்ளார். பின்னர் 'பிக்பாஸ்' சீசன் 13ல் கலந்துகொண்டு வெற்றி பெற்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டிருந்தவர்.
‘பலிகா வாது’, ‘தில் சே தில் தக்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புஜழ்பெற்றவர் இவர். இவர் நடித்த ‘பலிகா வாது’ சீரியல்தான் தமிழில் ‘மண்வாசனை’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.
அதன் பின்னர் ‘ஜலக் திக் லாஜா 6’ உள்ளிட்ட சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட சித்தார்த் சுக்லாவுக்கு இன்று (செப் 02) காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனே மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டபோது, சித்தார்த் சுக்லாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சித்தார்த் சுக்லாவின் இந்த மரணம் இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: எப்பேற்பட்ட கவிஞர்... life support-ல் புலமைப்பித்தன் .. மருத்துவமனையின் பரபரப்பு அறிக்கை!