சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் படத்தில் இருந்து Cut செய்யப்பட்ட காட்சி - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர்கள் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்துள்ள ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது.

Siddharth GV Prakash Sivappu Manjal Pachai cut short climax fight

இயக்குனர் சசி இயக்கத்தில் அபிஷேக் பிக்சர்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரித்துள்ள இப்படத்துக்கு சித்து குமார் இசையமைக்க, பிரசன்னா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். உறவுக்கு அளிக்கப்படும் முன்னுரிமையும், அதன் விளைவையும் மையப்படுத்தி குடும்ப டிராமா படமாக உருவாகியுள்ள இப்படம் கடந்த செப்.6ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் கண்டிப்பான போக்குவரத்து காவலராக சித்தார்த் நடித்துள்ளார். ஸ்ட்ரீட் ரேஸராக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் அசால்ட்டாக இருந்தாலும், தங்கை மீது அன்பும், கண்டிப்புமாக இருக்கும் பாசக்கார அண்ணனாக நடித்துள்ளார்.

இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்கள் வந்தாலும், படத்தின் நீளம் சற்று அதிகமாக இருப்பதாக கருத்து கூறினர். இதையடுத்து, படத்தின் நீளத்தை குறைக்க சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் 4 நிமிட சண்டைக் காட்சி குறைக்கப்பட்டு படத்தின் க்ளைமேக்ஸ் தற்போது விறுவிறுப்பாகியுள்ளது.

மக்களின் வேண்டுகோளையேற்று படக்குழு மேற்கொண்டுள்ள இந்த மாற்றம் கூடுதல் வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.