ஜி.வி.பிரகாஷ் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் உடன் இணைந்து நடித்து வெளியான படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. 'பிச்சைக்காரன்' படத்துக்கு பிறகு சசி இயக்கியுள்ள இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Harbhajan Singh will release first look poster of GV Prakash's Next

இதனையடுத்து ஜி.வி.பிரகாஷ் புதுமுக இயக்குநர் சுரேஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை ஆக்ஸெஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக தில்லி பாபு தயாரிக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிடவுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, ''தமிழ் புலவர் பராக்! பராக்! ட்விட்டர் உலக டான் சென்னை சூப்பர் கிங்க்ஸ் டீமோட செல்ல பிள்ளை ஹர்பஜன் சிங் எங்க படத்தோட பர்ஸ்ட் லுக் ரிலீஸ் பன்றது பெருமை. ஒத்துக்கொண்டதற்கு நன்றி ஹர்பஜன் அவர்களே' என்று குறிப்பிட்டுள்ளார்.